முடிவுக்கு வரும் காஸா போர்; அனைவருக்கும் பொது மன்னிப்பு - ரூட்டை மாற்றிய அமெரிக்கா!
காசாவில் அமைதியை ஏற்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.
போர் நிறுத்தம்
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரால் இதுவரை 64 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா திட்டம்
இந்நிலையில், காஸாவுடனான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அடுத்தகட்டமாக, ஹமாஸ் தரப்பிடம் எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன.
இதற்கிடையே காசாவில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த 21 பாயிண்டுகளை கொண்ட விரிவான ஒரு திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.