எப்பொழுது கல்யாணம் என கேட்டு நச்சரிப்பு - கோபத்தில் அடித்து கொன்ற இளைஞர்

Wedding Indonesia Marriage
By Karthikraja Aug 05, 2024 08:23 AM GMT
Report

எப்பொழுது கல்யாணம் என கேட்டு நச்சரித்தவரை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருமணம்

இந்தோனிசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் வசித்து வருகிறார் அசிம் இரியான்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வசித்து வந்தார். 

wedding

இவர் தனது பக்கத்துக்கு வீட்டில் உள்ள 45 வயதான சிரேக்கர் என்ற நபரிடம், பார்க்கும் போதெல்லாம் ஏன் இன்னும் சிங்கிளாக இருக்கிறாய்? எப்பொழுது திருமணம் செய்யப் போகிறாய் என கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இரவுகளில் மனைவியை பார்க்க வந்த பால்ய காதலன் - கணவர் செய்த வினோத செயல்

இரவுகளில் மனைவியை பார்க்க வந்த பால்ய காதலன் - கணவர் செய்த வினோத செயல்

தாக்குதல்

இந்த கேள்வி சிரேகருக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி முதியவரின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார். முதியவரின் மனைவி முன்னிலையில் அவரை மரக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிரேகரிடம் இருந்து முதியவரை மீது அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

indonesia man murder guy for ask when marriage

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிரேகரை காவல் துறையினர் கைது செய்தனர். திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்ததால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி முதியவரைத் தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.