கோழி முதலில் வந்ததா? முட்டை வந்ததா - விவாதத்தில் நண்பர் செய்த கொடூர சம்பவம்

Indonesia
By Karthikraja Aug 01, 2024 01:30 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

கோழியா முட்டையா முதலில் வந்த விவாதத்தில் நண்பரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோழியா? முட்டையா?

இந்தோனேஷியாவைச் சேர்ந்த கதிர் மார்க்கஸ் என்பவருக்கு தொழிலாளி ஒருவர் நண்பராக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி கதிர் மார்க்கஸை, அவரது நண்பர் மது அருந்த அழைத்து சென்றுள்ளார்.

hen or egg first

இதையடுத்து, மார்க்கஸும் அவரது நண்பரும் தெற்கு சுலவேசியின் கரையோர பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா? என இருவருக்கும் விவாதம் ஏற்பட்டுள்ளது. 

ஹிமாச்சலபிரதேச நிலச்சரிவு; சரிந்து விழும் அடுக்குமாடி கட்டிடம் - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

ஹிமாச்சலபிரதேச நிலச்சரிவு; சரிந்து விழும் அடுக்குமாடி கட்டிடம் - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

கொலை

ஒருகட்டத்தில் விவாதம் முற்றி வாக்குவாதமாக மாறிய பொழுது என்று மார்க்கஸ் அந்த இடத்திலிருந்து கிளம்ப முயல, ஆத்திரமடைந்த அவரது நண்பர் கத்தியை எடுத்து சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மார்க்கஸ் உயிரிழந்தார்.

death

தகவலறிந்த காவல்துறையினர் மார்க்கஸின் நண்பரைக் கைது செய்துள்ளனர். கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்ற வாக்குவாதத்தில் நண்பனையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.