பாலிக்கு போகனும்னு கனவு இருக்கா; விரைவில் கோல்டன் விசா - விவரம் இதோ!

Indonesia
By Sumathi Aug 17, 2023 07:08 AM GMT
Report

கோல்டன் விசா வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா சேரவுள்ளது.

கோல்டன் விசா 

இந்தோனேஷியா ஒரு குறிப்பிட்ட தொகையை நாட்டில் முதலீடு செய்யக்கூடிய நபர்களுக்கு நீண்ட கால விசாக்களை வழங்கும் பல நாடுகளின் குழுவில் இணைந்துள்ளது.

பாலிக்கு போகனும்னு கனவு இருக்கா; விரைவில் கோல்டன் விசா - விவரம் இதோ! | Indonesia Bali Soon To Be Launched Golden Visa

இந்த பட்டியலில் மெக்ஸிகோ, கிரீஸ், கனடா, கோஸ்டாரிகா, இலங்கை மற்றும் பல நாடுகள் உள்ளன. அங்கு செல்லவும் அங்கு சொத்துக்களை வாங்கவும், வைத்திருக்கவும் அனுமதி வழங்கப்படும்.

பாலி

மேலும், கோல்டன் விசா உள்ளவர்களுக்கு விரைவான குடியுரிமை விண்ணப்ப செயல்முறையை அறிமுகப்படுத்துவது பற்றியும் நுடிவு எடுக்கப்படவுள்ளது. நண்பர்களுடன் சுற்றுலா, ஹனிமூன் போன்றவற்றிற்கு தேர்ந்தெடுக்கும் இடம் பாலியாக தான் பெரும்பாலும் இருந்து வருகிறது.

பாலிக்கு போகனும்னு கனவு இருக்கா; விரைவில் கோல்டன் விசா - விவரம் இதோ! | Indonesia Bali Soon To Be Launched Golden Visa

அதன் அழகையும் செல்வ வளங்களையும், ரசிக்கவும் அங்கு உங்கள் வாழ்க்கையை தொடங்கவும் இந்த கோல்டன் விசா நல்ல வாய்ப்பை ஏற்படுத்த உள்ளது. கோல்டன் விசா எப்போதில் இருந்து வழங்கப்படும் என்ற சரியான விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த விசா செயல்முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.