பாலி தீவுக்கு இன்டர்நேஷனல் டூர் பேக்கேஜ்; IRCTC அசத்தல் அறிவிப்பு - யூஸ் பண்ணிக்கோங்க!

Indonesia Indian Railways
By Sumathi Jul 18, 2023 07:27 AM GMT
Report

பாலி (Bali) டூர் பேக்கேஜை IRCTC அறிமுகப்படுத்தியுள்ளது.

டூர் பேக்கேஜ்

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) பாலிக்கு சம்மர் டூர் பேக்கேஜை வழங்குகிறது. ஆகஸ்ட் 11 முதல் துவங்கி 5 இரவுகள் மற்றும் 6 பகல்கள் அடங்கிய பயணத்தை வழங்குகிறது.

பாலி தீவுக்கு இன்டர்நேஷனல் டூர் பேக்கேஜ்; IRCTC அசத்தல் அறிவிப்பு - யூஸ் பண்ணிக்கோங்க! | Irctc Introduces 6 Day 5 Night Package To Bali

இதற்கு "Awesome Bali" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.1,05,900 செலுத்த வேண்டும். தகவல்களின்படி Ubud Village, Tanah Lot Temple Tour, கடற்கரைகள் உள்ளிட்ட பல பிரபல இடங்களுக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள்.

IRCTC அறிவிப்பு

இந்த பேக்கேஜில் சுற்றுலாப் பயணிகளுக்கான உணவு மற்றும் பானங்கள் முதல் தங்குமிடம் வரை முழுமையான ஏற்பாடுகளை செய்து தரப்படவுள்ளது. மேலும் இதோடு இன்ஷூரன்ஸ் வசதியும் பெறலாம். ஒரு நபருக்கு டபுள் மற்றும் ட்ரிபிள் occupancy-க்கு கட்டணம் ரூ.1,05,900 ஆகும்.

பாலி தீவுக்கு இன்டர்நேஷனல் டூர் பேக்கேஜ்; IRCTC அசத்தல் அறிவிப்பு - யூஸ் பண்ணிக்கோங்க! | Irctc Introduces 6 Day 5 Night Package To Bali

 சிங்கிள் occupancy-க்கான கட்டணம் ரூ.1,15,800 ஆகும். 5 முதல் 11 வயது வரையிலான குழந்தையுடன் ஒருவர் பயணம் செய்ய விரும்பினால் கூடுதல் படுக்கைக்கு ரூ.1,00,600 கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். 2 - 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு Twin bed-க்கு ரூ.94,400 செலவாகும்.

பாலி தீவுக்கு இன்டர்நேஷனல் டூர் பேக்கேஜ்; IRCTC அசத்தல் அறிவிப்பு - யூஸ் பண்ணிக்கோங்க! | Irctc Introduces 6 Day 5 Night Package To Bali

ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் IRCTC Tourist Facilitation Center, மண்டல அலுவலகங்கள் அல்லது பிராந்திய அலுவலகங்களுக்கு சென்றும் இந்த டூருக்கு முன்பதிவு செய்யலாம்.