87 கல்யாணம் செய்த 61 வயது முதியவர்.. மனசாட்சி இல்லையா - குமுறும் 90s கிட்ஸ்!
61 வயது முதியவர் 87 திருமணங்கள் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
88வது திருமணம்
இந்தோனேசியா, மஜலெங்காவைச் சேர்ந்தவர் விவசாயி கான்(61). இவர் தனது 14 வயதில் முதல் முறையாக திருமணம் செய்துள்ளார். அவரது முதல் மனைவி அவரை விட இரண்டு வயது மூத்தவர். இதுகுறித்து பேசிய அவர், அப்போது எனது மோசமான அணுகுமுறை காரணமாக,

திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என் மனைவி விவாகரத்து கேட்டார் என்றார். இந்நிலையில், இவர் தனது முன்னாள் மனைவியை 88வது திருமணம் செய்யவுள்ளார். இதுகுறித்து, தனது முன்னாள் மனைவி தன்னிடம் மீண்டும் திரும்புவதை மறுக்க முடியாது.
பிளேபாய் கிங்
நாங்கள் பிரிந்து நீண்ட நாட்களாகி விட்டாலும், எங்களுக்கு இடையேயான காதல் இன்னும் வலுவாக உள்ளது என்றார். மேலும், 86வது திருமணம் ஒரு மாதம் மட்டுமே நீடித்தாலும், அந்த பெண் இன்னும் தன்னை காதலிப்பதாக கூறியுள்ளார்.

87 திருமணங்கள் செய்த கானுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை. கானுக்கு அவர் வசிக்கும் ஊரில் “பிளேபாய் கிங்” என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு தரப்பு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.