தாம்பத்ய உறவுக்கு கட்டாயப்படுத்திய முதியவர் - கதறி ஹெல்ப் லைனை நாடிய 87 வயது மனைவி!
87 வயது மனைவி, அவரது கணவர் தாம்பத்ய உறவுக்கு கட்டாயப்படுத்துவதாக அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
87 வயது மனைவி
குஜராத், வதோதாராவைச் சேர்ந்தவர் 89 வயது முதியவர். இவரது மனைவிக்கு வயது 87. இவருக்கு உடல்நிலை முடியாமல் இருந்துள்ளது. இந்நிலையில், தாம்பத்திய உறவுக்கு இணங்குமாறு அடிக்கடி அவரது கணவர் வற்புறுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் கணவரின் தொல்லையை தாங்கமுடியாத மூதாட்டி பெண்களுக்கான அபயம் ஹெல்ப் லைனுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறார். இது குறித்து அபயம் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தாம்பத்ய உறவு
``89 வயதான முதியவர் உடல் நலம் குன்றிய மனைவியை தாம்பத்திய உறவுக்காகக் கேட்டிருக்கிறார். கணவரின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத அந்த மூதாட்டியை அவர் தொடர்ந்து நச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
வயது முதிர்வு காரணமாக மூதாட்டியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அந்த மூதாட்டி படுத்த படுக்கையாகிவிட்டார். இந்த நிலையில், தன் மனைவியின் நிலை குறித்து அறிந்திருந்த முதியவர், படுத்த படுக்கையான நிலையிலும் உடல் உறவுக்கு வற்புறுத்தியிருக்கிறார்.
வற்புறுத்திய கணவர்
இதனால் அபயம் ஹெல்ப் லைனுக்கு தொடர்பு கொண்டு அந்த மூதாட்டி புகார் அளித்திருக்கிறார். கணவருக்கு ஆலோசனை வழங்க முயன்றோம். முதியவரிடம் யோகா செய்ய முயலுமாறு கேட்டுக்கொண்டோம்.
அந்த முதியவரை பாலியல் நிபுணரிடம் அழைத்துச் செல்லும்படி குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டோம்" என அந்த அவசர சேவை மைய அதிகாரிகள் தெரிவித்தார்.