மாயமான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கண்டுபிடிப்பு!

indnosiya-airplane-blackbox
By Jon Jan 11, 2021 02:08 PM GMT
Report

இந்தோனேசிய கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாயமான விமானத்தின் பாகங்கள் மற்றும் கருப்புப் பெட்டியினை மீட்புக் குழுவினா் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீவிஜயா ஏா் விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போா்க் கப்பல், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து வெளியாகும் சிகனலகளை வைத்து கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவா் பாகுஸ் புருஹிடோ கூறும்போது கடல் பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.அப்போது விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் இருக்கும் இடத்தை மீட்புப்படை கண்டுப்பிடித்துள்ளது.

இதன் மூலம், விமான பாகங்களும் கருப்புப் பெட்டிகளும் இருக்குமிடம் கண்டறியப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், 62 பேருடன் வந்த விமானம் சனிக்கிழமை புறப்பட்ட 4 நிமிடங்களில் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.