இந்தியாவின் 1 ரூபாய் கொடுத்தால் ரூ.500 தரும் நாடு - எங்கே தெரியுமா?
இந்திய ரூபாய்க்கு மிகவும் மதிப்புள்ள நாடு ஒன்று உள்ளது.
இந்திய ரூபாய்
உலக பொருளாதார சந்தையில் ஒவ்வொரு நாட்டின் பணத்திற்கும் ஒவ்வொரு மதிப்பு உள்ளது. அதன்படி, அமெரிக்காவின் ஒரு டாலருக்கு, இந்தியா 83 ரூபாய் கொடுக்க வேண்டும்.
இந்த வரிசையில் இந்தியா 1 ரூபாய் கொடுத்தால், 500 ரூபாயை தருகிறது ஒரு நாடு. ஈரான் தான் அது. உலக வல்லரசு நாடுகளுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் வகையில் இருந்தாலும், அதன் நாணய மதிப்பு மிகவும் மோசமாக உள்ளது.
ஈரானின் மதிப்பு
பல ஆண்டுகளாக இந்த நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. எனவே, பல நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கவில்லை. இதன் காரணமாக பொருளாதாரம் சரியத் தொடங்கியது.
ஒரு இந்திய ரூபாய் 507.22 ஈரானிய ரியாலுக்கு சமம். அதாவது, 10,000 ரூபாயுடன் இந்தியர் ஒருவர் ஈரானுக்கு சுற்றுலா சென்றால், வசதியாக பயணிக்கலாம். இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் மட்டுமே, ஈரான் நாடு, அவர்களின் உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் செய்து வருகிறது.
அமெரிக்க டாலரை வைத்திருப்பது, இந்த நாட்டில் மிகப்பெரிய குற்றம்.
இதனைப் போலவே, சியரா லியோனின் நாட்டிலும், ஒரு இந்திய ரூபாய்க்கு, 238.32 ரூபாய், இந்தோனேசியாவிலும் 1 இந்திய ரூபாய், ரூ.190க்கு சமமாக மதிப்பிடப்படுகிறது.