500 ஏக்கர் ஆடம்பர பங்களா! 20,000 கோடிக்கு சொத்து - இந்திய பணக்கார கிரிக்கெட்டர் இவரை தெரியுமா?

By Karthick Jul 04, 2024 03:19 AM GMT
Report

உலகின் பணக்காரர் கிரிக்கெட்டர் என்றால் பலரும் தோனி அல்லது விராட் கோலியின் பெயரையே கூறுவார்கள். ஆனால், இவரின் பக்கத்தில் கூட தோனி, விராட்டால் சொத்து மதிப்பின் அளவீட்டில் நிற்கமுடியாது.

Samarjitsinh Gaekwad

சரி அவரின் போட்டோவை போடுறோம், யார்'னு தெரியாது பாருங்க. தோனியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.926 கோடி, அதே போல இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.1400 கோடி என கூறப்படுகிறது.

இதுவே போதும்...ரொம்ப பெரிய தொல்லை - விராட் கோலியின் திட்டம்!! தூக்கி எறிந்த பிசிசிஐ!!

இதுவே போதும்...ரொம்ப பெரிய தொல்லை - விராட் கோலியின் திட்டம்!! தூக்கி எறிந்த பிசிசிஐ!!

 

ஆனால், இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி இருக்கும் என கணக்கிடப்படுகிறது. ரஞ்சி டிராபியில் தொடரில் பரோடா அணிக்காக கிரிக்கெட் விளையாடி இருக்கும் இவர் 1987 முதல் 1989 வரை இந்தியாவின் முதல்தர பேட்ஸ்மேனாக விளங்கினார். பின்னர் கிரிக்கெட் நிர்வாகியாகி, பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

Samarjitsinh Gaekwad palace

இவர் வசிக்கும் ஆடம்பர வீடு இங்கிலாந்து அரச குடும்பம் வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையை விட பெரியதாம். 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வீட்டின் பெயர் லக்ஷ்மி விலாஸ். புகழ்பெற்ற பனாரஸ் நகரில் இருக்கும் 17 பிரபலமான பாரம்பரிய கோயில்களின் அறக்கட்டளைகள் இவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதாம்.

அட யாரப்பா இவர் என நினைக்குறீர்களா? இவரின் பெயர் சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட். பரோடாவை ஆட்சி செய்த கெய்க்வாட் குடும்பத்தை சேர்ந்தவரான இவர், தான் உலகின் பணக்காரர் கிரிக்கெட் வீரர். மராட்டிய அரசு குலத்தை சேர்ந்த இவரின் பரம்பரையினர் பரோடாவை ஆட்சி செய்தவர்கள் ஆவர்.

Samarjitsinh Gaekwad with wife

இவரை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏப்ரல் 1967 இல் பிறந்த சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட் சிறிது காலமே முதல் தர கிரிக்கெட் வீரராக இருந்தார். அதனை தொடர்ந்து அகாடமி மூலம், இப்போதும் இந்திய கிரிக்கெட்டிற்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார். 2014-ஆம் ஆண்டு பாஜகவில் இணைத்தவர், 2017-இல் இருந்து அரசியல் ஈடுபாட்டையும் குறைத்து கொண்டார்.