கடலுக்கு நடுவே மிக நீண்ட கடல் பாலம் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
கடல் பாலம்
மகாராஷ்டிராவில் 27வது தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி செல்கிறார். அதன்பின், அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவ சேவா அடல் பாலத்தை திறந்து வைத்து, அதில் பயணம் செய்யவுள்ளார்.
மேலும், 30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் துவக்கி வைக்கவுள்ளார். மும்பையில் கட்டப்பட்டுள்ள இந்த கடல் பாலம் இந்தியாவிலேயே மிக நீண்ட பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
பிரதமர் மோடி
இந்த பாலம் கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு 17, 840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 16.5 கிலோ மீட்டர் கடலிலும், 5.5 கிலோ மீட்டர் நிலத்திலும் அமைந்துள்ளது.
இது, மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையிலான பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 20 நிமிடமாக குறைக்கும் என கூறப்படுகிறது. மேலும், இதனால் மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரமும் குறைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.