விஜயகாந்தை நினைவுக்கூர்ந்த பிரதமர் மோடி - நெகிழ்ந்து போன பிரேமலதா..!
திருச்சி வந்திருந்த பிரதமர் மோடி, விஜயகாந்தை நினைவு கூர்ந்ததற்கு பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார்.
கடிதம்
பிரேமலதா விஜயகாந்த் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், அரசியல் எல்லைகளை கடந்து விஜயகாந்த், பிரதமர் மோடி இடையே நட்புறவு இருந்தது.
விஜயகாந்த் குறித்து பிரதமர் பேசியதற்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோடி இரங்கல்
முன்னதாக திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த நாட்டின் பி[பிரதமர் மோடி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை நினைவுகூர்ந்து தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.
அவர் பேசும் போது, சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த். தனது நடிப்பால் மக்களின் மனங்களை வென்றவர். ஒரு அரசியல்வாதியாக அவர் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். அவரின் மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.