வெறும் 50 வினாடிகளுக்கு ரூ.5 கோடி - வாங்கிய நடிகை யார் தெரியுமா?
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?
நடிகை நயன்தாரா
இந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார். வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றனர்.
நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 2018ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின்(Forbes India) ‘பிரபலங்கள் 100’ பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய முன்னணி நடிகை இவர்தான்.
அதிக சம்பளம்
20 ஆண்டுகளில் 80 திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், பல விருதுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில், டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அந்த விளம்பரத்தில் நடிக்க, அவர் 50 வினாடிகளுக்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இது அவரது ஒரு படத்திற்கான கட்டணம் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.