இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுருச்சு; ரேடியோவில் அறிவித்தது இந்த நடிகர்தான் - யார் தெரியுமா?
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சதுன்னு வானொலியில் அறிவித்த நடிகர் குறித்த தகவல்களை பார்ப்போம்.
இந்தியா சுதந்திரம்
தனது 18 வயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கியவர் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன்.
திருநெல்வேலியை சேர்ந்த இவரது அண்ணன் பூர்ணம் ராமச்சந்திரன், சென்னை அகில் இந்திய வானொலியில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.
அண்ணனின் உதவியால் தனது 24 வயதில் டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலியில் செய்திவாசிப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
பூர்ணம் விஸ்வநாதன்
இந்தியா சுதந்திரம் அடைந்த போது, அந்த மகிழ்ச்சியான செய்தியை ஆனந்த கண்ணீரோடு ஆல் இந்தியா ரேடியோ வானொலியின் மூலம் முதன் முதலில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தவர் இவர்தான். நாடகத்தில் இருந்து அப்படியே சினிமாவின் பக்கம் வந்த இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் அசத்தியுள்ளார்.
உயர்ந்த மனிதன், விளையாட்டுப் பிள்ளை, மௌன ராகம், வருஷம் 16, தில்லு முள்ளு, மகாநதி, ஆசை, நினைத்தாலே இனிக்கும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவர் நடித்த படம் விஜய் நடிப்பில் வெளியான தமிழன். 2008ஆம் ஆண்டு இவர் காலமானார்.