காந்தியால் இந்தியா சுதந்திரம் பெறவில்லை - அடுத்த பஞ்சாயத்தை இழுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!

Mahatma Gandhi R. N. Ravi
By Karthick Jan 23, 2024 09:46 AM GMT
Report

நேதாஜி பிறந்தநாள் விழாவை கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும் போது, நேதாஜியின் ராணுவ படையில் இளைஞர் பலர் இருந்தனர் என குறிப்பிட்டார்.

ஆளுநர் உரை

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

rnravin-comments-about-nethaji-as-father-of-nation

விழாவில் பேசிய அவர், "இந்திய தேசிய ராணுவத்தின் கடற் மற்றும் விமான படையின் புரட்சியே இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம் என குறிப்பிட்டார். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் இந்திய ராணுவ படையில் தமிழரகள் பலரும் இடம்பெற்றிருந்தாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு சுதந்திர போராட்டக்காரர்கள் வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரை போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டியவை என கூறினார்.

தேசத்தந்தை..

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டி, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு படையை கட்டமைப்புக்கு பின் பல தலைமுறைகளுக்கு பிறகே இந்திய ராணுவத்தில் பெண்கள் அனுமதிக்கப்படுள்ளனர் என்பதையும் தெரிவித்தார்.

rnravin-comments-about-nethaji-as-father-of-nation

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேற்றுவதற்கு இந்திய தேசிய காங்கிரஸ்'ஸின் ஒத்துழையாமை இயக்கம் காரணமில்லை என்பதை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் அட்லீ பதிவு செய்துள்ளத்தையும் சுட்டிக்காட்டி பேசிய ஆளுநர் ஆர்என்.ரவி,

ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் Attendance..? அண்ணா பல்கலை. வந்த Circular..!!

ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் Attendance..? அண்ணா பல்கலை. வந்த Circular..!!

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி அல்ல என்றும் நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் தான்தேசத்தந்தை என குறிப்பிட்டார்.