இந்தியாவின் முதல் "அரிசி ஏடிஎம்" - ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போதும்..
முதல் அரிசி ஏடிஎம் மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரிசி ஏடிஎம்
நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்தபடியே இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக, மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, 'பாரத் அரிசி' என்று பெயரிடப்பட்டு கிலோ ரூ.29 என்று விலையும் நிர்ணயிக்கப்பட்டு, 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் அரிசி கிடைத்து வருகிறது.
மத்திய அரசு திட்டம்
இந்நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக புவனேஸ்வரில் முதல் அரிசி ஏடிஎம்-ஐ திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்த அரிசி ஏ.டி.எம் மையத்தை திறந்து வைத்துள்ளார்.
குடும்ப அட்டைத்தாரர்கள் அரிசி வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தில் தங்களது குடும்ப அட்டை அல்லது ஆதார் கார்டு எண்ணை பதிவிட்டு அவர்களுக்கான 25 கிலோ அரிசியை பெற்றுச் செல்லலாம்.
இதன் மூலம் மத்திய அரசு வழங்கும் மானிய அரிசியின் திருட்டை கணிசமாக குறைக்க முடியும்.
தொடர்ந்து, இந்த முறை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.