தண்ணீரில் ஓடும் முதல் ஹைட்ரஜன் ரயில் - உலகையே திரும்பி பார்க்க வைக்கும் இந்தியா!
ஹைட்ரஜன் ரயில்களை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது.
ஹைட்ரஜன் ரயில்
முதலில் ஹரியானாவில் உள்ள ஜிந்த்- சோனிபட் பாதையில் மார்ச் 31, 2025க்குள் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது. இதனால் அதிகபட்சம் மணிக்கு 110 கிமீ வேகத்தை எட்ட முடியும்.
இதில் அதிகபட்சம் 2,638 பயணிகள் செல்லலாம். இந்த ரயிலில் 1,200 ஹெச்பி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் உலகின் அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன்-ரயிலாக இது இருக்கும். இதில் கார்பன் வெளியேற்றம் இல்லை, ஏனெனில் இது வெறும் நீரையும் வெப்பத்தையும் மட்டுமே வெளியிடுகிறது.
மாசு இல்லா பயணம்
இந்த ரயில் ஹைட்ரஜன் மூலம் இயங்குவதால் வெறும் தண்ணீரை மட்டுமே எரிபொருளாக பயன்படுத்துகிறது என கூறலாம். ஹைட்ரஜன் ரயில்கள் மிகவும் அமைதியாக இயங்கும். இதன் மூலம் ஒலி மாசும் முழுமையாகக் கட்டுப்படுத்த உதவும்.
எரிபொருளுக்கு ஹைட்ரஜனை தேர்வு செய்வதன் மூலம், இந்தியா மாசு இல்லாத ரயில் பயணத்தை நோக்கி ஒரு முக்கிய படியை எடுத்து வைத்துள்ளது. இந்த வழித்தடம் அதிக பயணிகள் ஓட்டம் உள்ள பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு, பிற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்படலாம். ஜெர்மனி, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே ஹைட்ரஜன் ரயில்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ள நிலையில், இந்தியா தற்போது இந்த முன்னேற்றத்தில் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.