இந்தியாவில் முதல் 3D பிரிண்டெட் தபால் அலுவலகம் - மத்திய அமைச்சர் திறப்பு!

Karnataka India
By Vinothini Aug 19, 2023 04:35 AM GMT
Report

முதல்முறையாக 3D-யால் உருவாக்கப்பட்ட தபால் அலுவலகத்தை மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்.

தபால் அலுவலகம்

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள கேம்பிரிட்ஜ் பகுதியில் நேற்று இந்தியாவின் முதல் முறையாக (3D) அச்சிடப்பட்ட கட்டுமான தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட தபால் நிலையத்தை உருவாக்கினார். இதனை ரெயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் மென்பொருள் துறைகளுக்கான மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.

indias-first-3d-printed-post-office

இந்த தபால் நிலையம் 1021 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது, இது நேற்று திறந்தது முதல் அதன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இது பிரபல கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (L&T) மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், சென்னை கிளையை சேர்ன்ஹா தொழில்நுட்ப வல்லுநர்களின் வழிகாட்டுதளின்படி கட்டப்பட்டது என்று அஞ்சலக அதிகாரிகள் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர்

இந்நிலையில், மத்திய அமைச்சர் பேசுகையில், "இந்த புதிய கட்டுமான தொழில்நுட்பம், 3டி கான்கிரீட் அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இக்கட்டுமானத்தில் ரோபோவால் இயக்கப்படும் அச்சுப்பொறி கான்கிரீட்டை துல்லியமாக ஒன்றன் மேல் ஒன்றாக குவிக்கும்.

indias-first-3d-printed-post-office

இதில் உபயோகப்படுத்தப்படும் கான்கிரீட் சிறப்பு வகையை சேர்ந்தது என்பதால் இது விரைவாக கடினத்தன்மையை அடைகிறது. வழக்கமான கட்டுமான முறையில் கட்டியிருந்தால் இது கட்டி முடிக்க சுமார் 6 முதல் 8 மாதங்களாகும்.

பழைய முறையோடு ஒப்பிடும்போது இந்த தொழில்நுட்பத்தில் முழு கட்டுமான பணிகளும் 45 நாட்களில் நிறைவடைந்தது. நேரத்தையும், செலவையும் குறைப்பதால் இந்த கட்டுமான தொழில்நுட்பம் வழக்கமான முறைக்கு ஒரு சரியான மாற்றாக அமையும். இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பரவலாக பயன்படுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.