வெறும் ரூ.10,000த்தில் ராஜ வாழ்கை - இந்தியாவின் ரூ.1 இங்கு 500 ரூபாயாம்.. எங்கு தெரியுமா?
இந்தியாவின் ஒரு ரூபாய் எந்த நாட்டில் 500 ரூபாய் மதிப்பு என்று பார்க்கலாம்.
ராஜ வாழ்கை...
உலகின் பொருளாதார சந்தையில் ஒவ்வொரு நாட்டின் பணத்திற்கும் மதிப்பு உள்ளது. அதிலும், அமெரிக்காவின் ஒரு டாலர் இந்திய ரூபாயில் 83 ஆகும். அதற்கு நேர்மாறாக, இந்தியா 1 ரூபாய் கொடுத்தால், 500 ரூபாயை கொடுக்கும் நாடு ஒன்று உள்ளது.
இந்த நாட்டுடன் இந்தியாவுக்கு நல்ல உறவை கடைபிடித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இருந்தும் அமெரிக்காவின் பொருளாதார தடைகளால், நிலைமை மோசமடைந்து வருகிறது.
அதனால்தான் இந்த நாட்டில் 1 இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு சமம். அது நாடு வேறெதுவும் இல்லை ஈரான் தான். ஈரான் பணத்தை அந்நாட்டினர் ரியால்-இ-ஈரான் என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் ஈரான் ரியால் என்று அழைக்கப்படுகிறது.
எங்கு தெரியுமா?
மிகவும் பழமையான நாடுகளில் ஒன்றான ரியாலின் மதிப்பு நன்றாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு வெகுவாக சரிந்தது. ஒரு இந்திய ரூபாய் 507.22 ஈரானிய ரியாலுக்கு சமம்.
அதாவது, 10,000 ரூபாயுடன் இந்தியர் ஒருவர் ஈரானுக்கு சுற்றுலா சென்றால், அந்த நாட்டில் சொகுசாக தங்கி, வசதியாக பயணிக்கலாம். இங்குள்ள பிரமாண்டமான 5 நட்சத்திர ஓட்டலுக்கு சென்றால் ஒரு நாளைக்கு வெறும் ரூ.7,000 தான் செலவாகும்.
ஆனால், இடைப்பட்ட 5 நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்றால், ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை மட்டுமே ஆகும். இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே ஈரான் நாடு, அவர்களின் உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் செய்து வருகிறது.
அமெரிக்காவுடன் பகை தொடருவதால் டாலர் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால், அமெரிக்க டாலரை வைத்திருப்பது, இந்த நாட்டில் மிகப்பெரிய குற்றம். எனினும் ரியால் உலகின் மிகவும் பழமையான நாணயங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.