சுற்றுலாப் போறீங்களா? இந்தியர்கள் இந்த நாடு செல்ல விசா தேவையில்லையாம் - முழு விவரம்!
இந்தியர்கள் விசா இல்லாமல் தாய்லாந்திற்கு சுற்றுலாப் பயணம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விசா
இந்தியாவில் உள்ள பலத்தரப்பட்ட மக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர். அது மட்டுமின்றி கல்வி, மருத்துவம், வர்த்தகம் காரணங்களுக்காகவும் செல்கின்றனர். அந்த வகையில், தாய்லாந்து நாடு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் டாப் 10 சுற்றுலா செல்லும் நாடுகளில் தாய்லாந்து இடம்பிடித்து வருகிறது. இந்நாட்டின் சுற்றுலா வருவாய் என்பது ஜிடிபியில் சுமார் 20 சதவீத அளவிற்கு இருப்பது கவனம் பெற்றுள்ளது. அப்படிவட்ட இந்த நாட்டிற்கு இந்தியர்கள் வருவதற்கு விசா தேவையில்லை எனறால் நம்பமுடியுமா?
அதாவது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை காலவரையின்றி நீட்டிப்பதாக தாய்லாந்து அறிவித்துள்ளது. நவம்பர் 11, 2024ஆம் ஆண்டுடன் கொள்கை முடிவடைய இருந்த நிலையில், தற்போது இந்திய சுற்றுலாப் பயணிகள்,
தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தங்கி மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் குடியேற்ற அலுவலகங்கள் மூலம் இதை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து கொள்ளலாம். இந்த நடவடிக்கையின் மூலம், அதிக இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதுடன்,
நாடு
தாய்லாந்தின் சுற்றுலாத்துறையும் மேம்படும் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலிவு விலை, நட்புடன் பழகும் உள்ளூர்வாசிகள் மற்றும் பரந்த அளவிலான இடங்கள் ஆகியவற்றுடன், தாய்லாந்து இப்போது இந்தியப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.
தாய்லாந்தில் உள்ள பல பிரபலமான இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக அமைகிறது. பாங்காக்கில் உள்ள Wat Arun போன்ற புகழ்பெற்ற கோயில்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகழிக்கலாம். வடக்கு தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் அமைதியான கோயில்கள்,
மற்றும் அழகான மலைப் பாதைகளுடன் எழில் மிகுந்த ஒரு சிறந்த அனுபவத்தை தருகிறது. பாங்காக்கிற்கு அருகில் உள்ள மிதக்கும் சந்தைகள் ஒரு தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகின்றனர். ஆகையால் விடுமுறை நாட்களை கழிக்க தாய்லாந்து ஒர் சிறந்த சுற்றுலா இடமாக கவர்கிறது.