இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை - வெளியான அசத்தல் அறிவிப்பு!
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை
ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றறொரு நாட்டிற்குள் செல்ல விசா என்பது அவசியமான ஒன்று. சில நாடுகளுக்கு செல்வதற்கு எளிதாக விசா பெற்றுவிடலாம்.

ஆனால், கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகளும் உள்ளன. இந்நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
விசா தேவையில்லை
இந்தியா மட்டுமின்றி சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்தில் உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கைக்கு விசா எடுக்காமல் சென்று வரலாம்.இத்திட்டத்தை சோதனை முயற்சியாக மார்ச் 31 வரை அமல்படுத்த இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை : இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்து செல்லவுள்ள திருமாவளவன் IBC Tamil
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan