இந்தியர்கள் அமெரிக்காவை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்கிறார்கள்: ஜோ பைடன்

america usa biden indian
By Jon Mar 05, 2021 11:52 AM GMT
Report

செவ்வாய் கிரகத்தில் கடந்த மாதம் வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பி வைத்த நாசா விஞ்ஞானிகள் குழுவினரோடு அதிபர் ஜோ பிடன் உரையாற்றினார்.

காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய, அமெரிக்கர்களை அவர் வெகுவாக புகழ்ந்தார். செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியதில் முக்கிய பொறுப்பு வகித்த அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்வாதி மோகன், வினய் ரெட்டி உள்ளிட்டோருக்கு வாழ்த்து கூறிய பைடன். மக்கள் பணிக்கு அதிக எண்ணிக்கையில் இந்திய - அமெரிக்கர்கள் வருவது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக ஜோபைடன்கூறியுள்ளார்.

ஜோபைடன் அதிபராக பதவியேற்ற 50 நாட்களுக்குள் தனது நிர்வாகத்தில் உள்ள முக்கிய இலக்காக்களில் 55 இந்திய அமெரிக்கர்களை பணியில் அமர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.