தீவிரவாதிகளுக்கு விற்கப்படும் இந்திய பெண்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்..!

Kerala
By Thahir Jun 18, 2022 05:39 PM GMT
Report

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்திய பெண்கள் பாலியல் இச்சைகளுக்காக விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெளிநாட்டு வேலை 

கேரள மாநிலம் கொச்சியில் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஒரு தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏராளமானோரை வேலைக்காக அனுப்பி வருகின்றனர். இந்த 2 நிறுவனத்தின் மூலம் வளைகுடா நாடுகளில் உள்ள செல்வந்தர்களின் வீடுகளில் வீட்டு வேலை பார்ப்பதற்கும்,

வீடுகளில் உள்ள குழந்தைகளை பராமரிப்பதற்கும், இளம் பெண்கள் தேவை என்று விளம்பரம் செய்தனர். அந்த விளம்பரத்தில் சம்பளமாக மாதம் 60000 கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த விளம்பரத்தை பார்த்த ஏராளமான பெண்கள் வேலைக்கு விண்ணப்பித்தனர் வேலைக்காக விண்ணப்பித்த பெண்களில் தகுதியான பெண்களை தேர்ந்தெடுத்து அந்த தனியார் நிறுவனம் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அப்படி வேலைக்கு சென்ற பெண்களை அங்குள்ள செல்வந்தர்களின் வீடுகளில் அடிமை வேலைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

இதற்காக கொச்சியில் உள்ள அந்த நிறுவனத்தினர் அனுப்பிய, ஒவ்வொரு நபருக்கும் ஒன்பது லட்சத்திற்கு அடிமை வேலைக்காக அவர்களை விற்றுள்ளனர்.

இதனை அங்கு வேலைக்கு சென்ற பெண்கள் தங்களது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் துபாய் குவைத் பகரின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள, இந்திய அமைப்புகள் மூலம் மூன்று இளம் பெண்கள் மீட்க்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்தப் பெண்களில் கேரளாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் கொச்சி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

தீவிரவாதிகளுக்கு விற்பனை 

அதன் பெயரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினரின் விசாரணையில் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த மஜீத் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

மேலும் இந்த விவகாரத்தை மத்திய புலனாய்வுத்துறை கையில் எடுத்துள்ளது. இதனால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வளைகுடா நாடுகளுக்கு அடிமை வேலை வேலைக்கு விற்கப்படும் பெண்களை சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு அந்த பெண்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பாலியல் இச்சைகளுக்கு உள்ளாகியுள்ளனர். என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

எத்தனை பெண்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர், என்ற விவரம் தெரியவில்லை மேலும் இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.