தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்... மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் உயிரிழந்தவர்களின் படங்கள் என்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி சமீபத்தில் இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தது. அதனடிப்படையில் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் வாபஸ் பெறப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.
மேலும் காவல் துறையால் கைது செய்யப்பட்ட 93 நபர்களுக்கு நிவாரணமாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் நின்றுவிட்டது. அதேசமயம் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சார்ந்த 17 பேருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் அவுகேர் பணிந்துகொண்டு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 11 பேரின் புகைப்படங்களும் அஞ்சலி செலுத்தினர்.