உலகிலேயே நீளமான கூந்தலை கொண்ட பெண்..!! எவ்வளவு நீளம் தெரியுமா..?
உலகிலேயே அதிக நீளமான கூந்தலை உடையவர் என்ற பெருமையை உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் பெற்றுள்ளார்.
ஸ்மிதா சாதனை
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 46 வயதாகும் ஸ்மிதா. இவர் தனது 14ஆவது வயதிலிருந்து தனது கூந்தலை வெட்டவே இல்லையாம். அதன் காரணமாகவும், சரியான பராமரிப்பின் பலனாக இவர் தற்போது உலகின் நீண்ட நீளம் கொண்ட கூந்தலை உடையவர் என்ற பெருமையை ஸ்மிதா பெற்றுள்ளார்.
கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து ஸ்மிதா கூறுகையில், “இந்தியக் கலாசாரத்தில், பெண் தெய்வங்கள் நீண்ட கூந்தலை உடையவர்களாகக் காட்டப்படுகின்றனர். எங்களது சமுதாயத்தில், பெண்கள் கூந்தலைக் கத்தரிப்பது அமங்கலமானதாகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் பெண்கள் கூந்தலை வளர்க்கின்றனர் என்றார்.
எவ்வளவு நீளம் தெரியுமா..?
தனது முடியை சரியாக பராமரிக்க ஸ்மிதா வாரம் இருமுறை தலையை அலசுகிறார். அதற்காக இவருக்கு 45 நிமிடங்கள் வரை ஆகின்றனவாம். அதனை தொடர்ந்து, முடியை தலையைத் துவட்டிவிட்டு, கைகளாலேயே சிக்கெடுப்பாராம். இவ்வாறாக அனைத்தையும் செய்து முடித்திட இவருக்கு சராசரியாக மூன்று மணிநேரம் ஆகிவிடுமாம்.
என்னால் முடிந்த வரை என் தலைமுடியை கவனித்துக் கொள்வேன் என்னும் ஸ்மிதா, என் தலைமுடியை நான் ஒருபோதும் வெட்ட மாட்டேன் என்றும் என் வாழ்க்கை என் தலைமுடியில் உள்ளது என பெருமிதத்துடன் கூறுகிறார். சரி இவரின் கூந்தலின் நீளம் எவ்வளவு தெரியுமா.? 7 அடி 9 அங்குலம் அதாவது 236.22 சென்டிமீட்டர் ஆகும்.
Say hello to Smita Srivastava from India, the woman with the longest hair in the world ?♀️
— Guinness World Records (@GWR) November 29, 2023
Her long locks were measured at 236.22 centimeters (7 ft 9 in) ? pic.twitter.com/Pkb6xms8Sp