மதம் மாறி பாக். காதலனுடன் திருமணம் செய்த பெண் - குழந்தைகளுடன் தவிக்கும் கணவன்!

Pakistan India Rajasthan
By Sumathi Jul 26, 2023 04:41 AM GMT
Report

இந்திய பெண் பாகிஸ்தான் காதலரை மதம் மாறி திருமணம் செய்துள்ளார்.

ஆன்லைன் காதல் 

ராஜஸ்தான், ஆல்வார் பகுதியில் வசித்து வருபவர் அஞ்சு(34). தன்னுடைய பாகிஸ்தான் காதலனைத் தேடி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். சட்டப்படி வாகா எல்லை வழியாக பயணித்துள்ளார். அங்கு சென்றவுடன் அவரையும், அவரின் காதலர் நஸ்ருல்லாவையும் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

மதம் மாறி பாக். காதலனுடன் திருமணம் செய்த பெண் - குழந்தைகளுடன் தவிக்கும் கணவன்! | Indian Woman Anju Marries Friend In Pakistan

ஆனால் அவரிடம் பயண ஆவணங்கள் சரியாக இருந்ததால் இருவரையும் விடுவித்துவிட்டனர். முன்னதாக, தங்களுக்குள் காதல் இல்லை என்று நஸ்ருல்லா தெரிவித்த நிலையில், தற்போது திருமணம் செய்துக் கொண்டனர்.

மதம் மாறி திருமணம்

இருவரின் திருமணம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் சட்டப்படி நடந்துள்ளது. அதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து, இது தொடர்பாக அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ்,

மதம் மாறி பாக். காதலனுடன் திருமணம் செய்த பெண் - குழந்தைகளுடன் தவிக்கும் கணவன்! | Indian Woman Anju Marries Friend In Pakistan

"இரண்டு குழந்தைகளையும், கணவனையும் விட்டுவிட்டு அஞ்சு ஓடிய விதம் கவலை அளிக்கிறது. தன் குழந்தைகளை நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதை செய்ய வேண்டுமானால் முதலில் தன் கணவனை விவாகரத்து செய்திருக்க வேண்டும்.

தனது குழந்தைகள் மற்றும் கணவரின் எதிர்காலத்தை அவள் அழித்துவிட்டாள். எங்களை பொறுத்தவரை அஞ்சு இனி உயிருடன் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.