அமெரிக்க அதிபர் தேர்தல்: காரசாரமான விவாதம் - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி முன்னிலை!
அதிபர் தேர்தல் விவாதத்தில் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி முன்னிலை வகிக்கிறார்.
அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இவருக்கு எதிராக இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி உள்பட பலர் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர். குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான நான்காவது விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
விவேக் ராமசாமி முன்னிலை
இதில், விவேக் ராமசாமி, தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் மற்றும் நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோர் பங்கேற்று விவாதித்தனர்.
2023ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவாகியிருந்தாலும், இந்த காலநிலை மாற்ற நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கு எதிராக விவேக் ராமசாமி கருத்து தெரிவித்தார். நிக்கி ஹாலே பேசும்போது, டொனால்டு டிரம்பை தாக்கினார். நாடகம் அல்லது வெறும் வாய்ப்பேச்சு மட்டும் இல்லாமல் அரசியலை அணுகுவதாக உறுதியளித்தார்.
இதில், விவேக் ராமசாமி, டிசாண்டிஸ் ஆகிய இருவரும் முன்னிலை பெற்றனர். முன்னதாக பிரசாரத்தில் ஆரம்பம் முதலே விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருவதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.presidential-debate