கோடீஸ்வரர்களின் கிராமம் எது தெரியுமா? அதுவும் இந்தியாவில்..
இந்தியாவின் கோடீஸ்வரர்களின் கிராமம் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
கோடீஸ்வரர்களின் கிராமம்
மகாராஷ்டிரா, அகமதுநகர் மாவட்டத்தில் ஹிவாரே பஜார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பல கோடீஸ்வரர்கள் வசிப்பதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த கிராமம் ‘கோடீஸ்வரர்களின் கிராமம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு வசிக்கும் 305 குடும்பங்களில் 80 பேர் கோடீஸ்வரர்கள். 50 குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கின்றனர். இந்த குடும்பங்கள் விவசாயத்தின் மூலம் மட்டுமே வருமானத்தை ஈட்டுகின்றனர்.
பிரதமர் பாராட்டு
300க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளது. மேலும், ஆழ்குழாய் கிணறு கட்டி முடிக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டமும் 30 அடியாக உயர்ந்துள்ளது.
கிராமத்தின் தனிநபர் வருமானம், நாட்டின் முதல் 10 சதவீத கிராமப்புறப் பகுதிகளில் சராசரியாக மாத வருமானம் ரூ.890ஐ விட இரண்டு மடங்கு அதிகம். 2020ல் நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியின் போது,
பிரதமர் நரேந்திர மோடி, நீர் பாதுகாப்பில் இந்த கிராம வாசிகளின் உணர்திறனையும், தண்ணீரை வீணாக்குவதை தடுக்க பயிர் முறையில் மாற்றங்களை கொண்டு வந்ததையும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.