T20 பட்டியலில் முதல் இடம் - இளம் வீரரை கழட்டிவிட்ட BCCI - அவருக்கு பதில் தான் சாஹல்

Indian Cricket Team Board of Control for Cricket in India Yuzvendra Chahal T20 World Cup 2024
By Karthick May 01, 2024 09:09 PM GMT
Report

உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

உலககோப்பை டி20

உலக கோப்பை டி20 தொடர் வரும் ஜூன் 1- ஆம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்ளின் ஆர்வத்தை துண்டியுள்ள இந்த தொடர் மேற்குவங்கம் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெறுகிறது. உலக நாடுகள் இதற்காக மும்முரமாக தயாராகி வருகின்றன.

indian team world cup squad no bishnoi

உலகக்கோப்பைக்காக விளையாட போகும் அணிகள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறார்கள். இந்திய அணி கடந்த உலகக்கோப்பை 50 ஓவர் தொடரை இறுதி போட்டியில் தோற்றது.அதற்கு பரிகாரமாக ரோகித் சர்மா இந்த கோப்பையை வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது.

நேற்று இந்த தொடரில் விளையாடப்போகும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

indian team world cup squad no bishnoi

ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், மாற்று வீரர்களாக சுப்மன் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பட்டியலில் முதல் இடம்  

அணியில் ரவி பிஷ்ணோய்க்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. ரவி பிஷ்ணோய்க்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி உலக டி20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.

டீம்'ல இருக்காரு - ஆனாலும் ஹர்டிக்கை சைலண்டாக கழட்டிவிட ஸ்கெட்ச் போடும் ரோகித்!!

டீம்'ல இருக்காரு - ஆனாலும் ஹர்டிக்கை சைலண்டாக கழட்டிவிட ஸ்கெட்ச் போடும் ரோகித்!!

அவர் தற்போது 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் பிஷ்ணோய், 10 போட்டிகளில் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆனால், அவருக்கு பதிலாகவே மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான சாஹலை இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

indian team world cup squad no bishnoi

சாஹல் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இந்திய அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இந்த ஐபிஎல் தொடரில் இது வரை 9 போட்டியில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.