இவர்களுக்கு அணியில் இடமே இல்லை - சீனியர்களை ஓரம் காட்டுகிறாரா கம்பீர்??
இந்திய தேசிய அணியில் விளையாட பல வீரர்கள் ஆயுதமாக சிறப்பான ஃபார்மில் உள்ளார்கள்.
இந்திய அணி
அணி தேர்வு என்பது பெறும் சிக்கலான ஒன்றாக டி20 உலகக்கோப்பையின் போதும், நேற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தின் ஆடும் லெவன் தேர்வில் பயங்கரமாக எதிரொலித்தது. நேற்று ஜிம்பாப்வே அணிக்கான ஆட்டத்தில், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியே குழப்பமாக ஆட்டம் துவங்கும் வரையில் இருந்தது. இந்த தொடரில் முதல் போட்டியை தவிர அடுத்த 3 போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிதாகி விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதனால் 5'ஆம் போட்டிக்கான தேர்வு கடினமாக அமைந்தது. இறுதியில் துருவ் ஜூரேலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிளேயிங் அணியில் ஜெய்ஸ்வால்,கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரியான் பராக், சிவம் துபே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், அடுத்து வரும் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு அணி தேர்வு என்பது பெறும் கடினமாக இருக்கும் என்றே தெரிகிறது.
என்ன செய்வார் கம்பீர்
கம்பீர் தலைமை பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு நடைபெறவிருக்கும் முதல் தொடர் என்ற காரணத்தால் சீனியர் வீரர்களும் அணியில் இடம் பெறுவார்கள் என்றே தெரிகிறது.
அப்போது அணி தேர்வில் துவங்கி பிளேயிங் இலவன் வரை அனைத்துமே சிக்கலாக அமைந்துவிடும் பொறுத்திருந்து பார்க்கலாம் கம்பீர் எப்படி அணியை தேர்வு செய்கிறார் என்று. பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என்றே தெரிகிறது.
சிறிய அணியுடனான போட்டி என்பதால், அணியில் சீனியர் வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பார் கம்பீர் என நம்பப்படுகிறது.

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
