புள்ளி பட்டியல் கணிப்பு: இந்திய அணி அரையிறுதிக்கு வராதா? ஷிகர் தவான் ட்வீட்!

Shikhar Dhawan Indian Cricket Team ICC World Cup 2023
By Sumathi Oct 26, 2023 06:09 AM GMT
Report

 ஷிகர் தவான் பகிர்ந்துள்ள ட்வீட் கவனம் பெற்று வருகிறது.

இந்திய அணி

இந்திய அணி தான் விளையாடிய ஐந்து போட்டிகளில் ஐந்தையும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை சந்திக்க உள்ளது.

indian cricket team

தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கின்றன.

 ஷிகர்  ட்வீட்

நான்காவது இடத்தில் ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா அணி உள்ளது. இந்த ஐந்து போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என பெரிய அணிகள் இருக்கின்றன.

இந்நிலையில், அரையிறுதி வாய்ப்புகள் குறித்து ஷிகர் தவான், “உலகக்கோப்பையில் ஒவ்வொரு போட்டியும் புள்ளி பட்டியலை மாற்றி அமைக்கிறது. இந்தியா நியூசிலாந்து மற்றும் சவுத் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதிக்கான தங்கள் இடங்களை பெறுவதாக தெரிகிறது.

தினமும் 8 கிலோ மட்டன் சாப்பிட்றாங்க; ஆனாலும், பாகிஸ்தானை வறுத்தெடுத்த வீரர்!

தினமும் 8 கிலோ மட்டன் சாப்பிட்றாங்க; ஆனாலும், பாகிஸ்தானை வறுத்தெடுத்த வீரர்!

இப்பொழுது நான்காவது இடத்திற்கான போட்டிதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அணிக்கு நல்ல ரன் ரேட் தற்பொழுது தேவையாக இருக்கிறது.

இந்தியா, நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா இதில் ஏதாவது ஒரு நாடு அரையிறுதிக்கு வராமல் போனால் அது அதிர்ச்சிக்குரிய ஒன்று. இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்? உங்கள் எண்ணங்களை பகிரவும்” என ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.