இந்த மாநிலத்தில் ஒரு நாய் கூட கிடையாது - அங்கு போகணும்னா அரசு அனுமதி வேண்டும்!
நாய்களே இல்லாத இந்தியாவின் மாநிலம் எது தெரியுமா?
லட்சத்தீவு
இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று லட்சத்தீவு. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு தங்களது நேரத்தை செலவிடுகின்றனர்.
இந்த இடம் குறித்து பலரும் அறியாத தகவல் என்னவென்றால், செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்கள் இரண்டையும் கொண்டு வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. லட்சத்தீவுகள் நாய்கள் இல்லாத இடமாகவே உள்ளது.
நாய்க்கு தடை
நாய் மட்டுமின்றி பாம்புகளும் முற்றிலும் இல்லை. உலகின் பாம்புகளே இல்லாத இடங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. அதற்கு பதிலாக பூனைகள் மற்றும் எலிகளின் வசிப்பிடமாக உள்ளது.
மேலும், தீவுகளைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் பல்வேறு உயிரினங்களால் நிறைந்துள்ளன, 600 க்கும் மேற்பட்ட வெவ்வேறு உயிரினங்கள் வாழ்கிறது.
இதுதவிர குறைந்தது ஆறு தனித்துவமான பட்டாம்பூச்சி மீன்களை இங்கே காணலாம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இது ரேபிஸ் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.