தன் மீது மோதிய கார்.. தேடி கண்டுபிடித்து பழிவாங்கிய நாய் - நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்!
தன் மீது மோதிய காரை தேடி கண்டுபிடித்து நாய் ஒன்று பழிவாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
மத்திய பிரதேசம்
பொதுவாகப் பாம்பு தான் தன்னை அடித்தவரைப் பழிவாங்கத் துடிக்கும் என்று திரைப்படத்திலும் அவப்போது நிஜ வாழ்க்கையிலும் பார்த்து இருக்கிறோம். ஆனால் இங்கு நாய் ஒன்று தன் மீது மோதிய காரை தேடி கண்டுபிடித்துப் பழிவாங்கிய சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரஹ்லாத் சிங் கோஷி என்பவர் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி மதியம் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென சாலையிலிருந்த நாய் மீது மோதியுள்ளார்.இதில் அந்த நாய்க்கு எந்த அடியும் ஏற்படவில்லை.
பின்னர் மோதிய காரை பார்த்தும், பிரஹ்லாத்தை பார்த்தும் அந்த நாய் குறைத்துக் கொண்டு குறிப்பிட்ட வரை காரை துரத்திச் சென்றுள்ளது. அதன்பிறகு நள்ளிரவு சுமார் 1 மணியளவில் திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரஹ்லாத் சிங் வீட்டிற்கு வந்துள்ளார்.
பழிவாங்கிய நாய்
காலை எழுந்து காரை பார்த்த போது வாகனத்தின் பானெட்டில் ஏராளமான கீறல்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தார். அதில் இரண்டு நாய்கள் காரை நகங்களால் கொடூரமாகத் தாக்கி கீறும் காட்சிகள் பதிவாகி இருந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரஹ்லாத் சிங் புரியாமல் திகைத்துள்ளார். பின் திருமண நிகழ்விற்கு காரில் சென்ற போது அதன் மீது எனது கார் மோதியது திடீரென்று நினைவுக்கு வந்தது.