கல்வியை விட திருமணத்திற்கு அதிக செலவு; அதுவும் இந்தியர்கள் - எவ்வளவு தெரியுமா?
இந்தியர்கள் அதிகபட்சமாக திருமணத்திற்கே செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய திருமணம்
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஜெஃப்ரிஸ் (Jefferies). இந்த பன்னாட்டு முதலீட்டு மற்றும் நிதி நிறுவனம் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்தியர்களின் திருமண செய்யும் செலவுகளை பற்றி ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், இந்தியத் திருமணத்திற்காக ரூ.10.7 லட்சம் கோடி செலவு செய்யப்படுகிறது. இது அமெரிக்காவைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.
அதிக செலவு
ஒவ்வொரு திருமணத்திற்கும் சராசரியாக ரூ.12.5 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.4 லட்சமாக உள்ள நிலையில், அதனைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக திருமணத்திற்கு செலவு செய்யப்படுகிறது.
தனிநபரின் ஆண்டு வருமானத்தைவிட ஐந்து மடங்கு அதிகம். ஆடைகள் மற்றும் நகைகள் செலவிற்காக சுமார் 30% பணம் செலவிடப்படுகிறது. உணவு மற்றும் அது சார்ந்தவைக்காக சுமார் 20% பணம்.
போட்டோகிராஃபி, மேடை அலங்காரம் போன்ற இதர ஆடம்பர செலவுகளுக்காக அதிகமாக செலவு செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.