சிவப்பு நிறத்திற்கு மாற்றப்படும் ரயில் பெட்டிகள் - நீல நிறம் மாற்றப்பட்டது ஏன் தெரியுமா?
நீல நிறத்திலிருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றப்படும் காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ICF - LHB
இந்திய ரயில்வேயில் இரண்டு வகையான பெட்டிகள் இயங்கி வருகின்றன. ICF பெட்டிகள் நீல நிறத்திலும், LHB பெட்டிகள் சிவப்பு நிறத்திலும் உள்ளன. மார்ச் வரை சுமார் 2000 LHB பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
இவை ஸ்லீப்பர் மற்றும் ஜெனரல் பெட்டி வகையாக இருக்கின்றன. தற்போது ICFல் மொத்தம் 740 ரயில்கள் இயங்குகின்றன. நீல நிறப் பெட்டிகள் பழையவை, சிவப்பு நிறப் பெட்டிகள் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.
ரயில்வே முடிவு
LHB பெட்டிகளை விட ICF நீல நிற பெட்டிகள் 1.7 மீட்டர் குறைவாக இருக்கும். விபத்து நேரும்போது, பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஏறும் அபாயமும் உள்ளது. எனவே, ICF நீல நிற பெட்டிகளை 18 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும்.
ஆனால், இந்த பெட்டிகள் ICF பெட்டிகளை விட 1.7 மீட்டர் நீளம் கொண்டவை. விபத்துக்குப் பிறகு அதன் பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஏறும் அபாயம் இருக்காது. LHB பெட்டிகளை 24 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும்.
தற்போது, இந்திய ரயில்வே நீல நிற பெட்டிகளை அகற்றி சிவப்பு நிறத்திற்கு (தொழில்நுட்பம்) மாற்றப் போகிறது. 2026-27 நிதியாண்டுக்குள் இவற்றை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.