தனியார் மயமாகிறதா இந்திய ரயில்வே? பதிலளித்த வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan Indian Railways
By Karthikraja Aug 06, 2024 07:00 PM GMT
Report

 இரயில்வே துறையை தனியார் மயமாக்குதல் குறித்த எம்.பி. சு. வெங்கடேசனின் கருத்துக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

CPI(M) ன் பாராளுமன்ற உறுப்பினரான திரு. சு.வெங்கடேசன் அவர்களின், பொய் பரப்புரைகளுக்கான தக்க பதில்கள் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

vanathi srinivasan

இந்த அறிக்கையில், “மறுசீரமைப்பு” என்பதற்கு “தனியார்மயம்” என்ற புதிய அர்த்தத்தை வழங்கிய தமிழ்ப் புலவர் திரு. சு.வெங்கடேசன் அவர்களே, மத்திய அரசின் பட்ஜெட் குறித்த குழப்பங்களும் தடுமாற்றமும் உங்களுக்குத் தானே தவிர, அன்றாட அரசியலை உற்று கவனித்து வரும் தமிழக மக்களுக்கு அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

வங்கதேச அரசியல் நெருக்கடி; தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு - அண்ணாமலை யோசனை

வங்கதேச அரசியல் நெருக்கடி; தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு - அண்ணாமலை யோசனை

இரயில்வே பட்ஜெட்

உங்களின் “குறை கூறும் கண்ணாடியை” சற்று கழற்றி வைத்துவிட்டு, ஒற்றைச் சார்பற்ற கருத்துக்களுடன் ஒரு விவாதத்தில் நீங்கள் பங்கெடுத்தால், உங்களுடன் விவாதிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால், மீண்டும் மீண்டும் ஆதாரமற்ற கருத்துக்களை, உங்கள் கற்பனையுடன் கலந்து கோர்வையாகக் கூறுவதன் மூலம், சமநிலைக் காக்கும் ஆரோக்கியமான விவாதத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகிறது. 

குறிப்பாக, பட்ஜெட்டில் “இரயில்” என்ற வார்த்தையே இல்லை என்று நீங்கள் கூறுவதிலிருந்தே, பட்ஜெட் உரையை நீங்கள் எத்தனை அழகாக கவனித்திருப்பீர்கள் என்று தெரிகிறது. காரணம், பெயரே இல்லாத துறைக்கு எவ்வாறு ரூ.2.55 லட்சம் கோடி நிதி ஒதுக்கியிருக்க முடியும்?

மேலும், மத்திய அரசின் யூனியன் பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட, இரயில்வே பட்ஜெட்டை “தனியார்மயமாக்கல்” என்றும், பாஜக அரசு “இரயில்வே பட்ஜெட்டை ஒழித்துவிட்டது” என்றும், பொய் பரப்புரைகளைப் பரப்பி, தானும் குழம்பி தமிழக மக்களையும் குழப்ப முயற்சிக்கும் உங்களைப் போன்ற கட்டுக்கதை சொல்லிகளுக்கு, உங்கள் பாணியிலேயே மிக நீண்ட விலாவரியான விளக்கத்தைக் கொடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டுவிட்டது எனும் வதந்தி.

அஸ்வினி வைஷ்ணவ்

செயல்பாட்டு திறன் மற்றும் நிதி நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, நவீனமயமாக்களில் கவனம் செலுத்தும் “பிபேக் தேப்ரா குழு”, தனியார்மயமாக்கலை ஆதரிப்பதாக நீங்கள் கூறுவதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள் திரு. சு.வெங்கடேசன் அவர்களே? ஒருவேளை, உங்கள் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில், நிதிப்பற்றாக்குறையால் “தனியார்மயமாக்கலை” அதிகப்படுத்துவோம் என்று அம்மாநில நிதியமைச்சர் அறிவித்ததை, நமது மத்திய அரசுடன் ஒப்பிட்டு குழம்பிவிட்டீர்களா? 

காரணம், இரயில்வே துறையை தனியார்மயமாக்குதல் என்பது முற்றிலுமான வதந்தி என்பதை, நமது மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் தெளிவுபடுத்திய பிறகும், உங்கள் பொய்க் கதைகளைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்புவது சரியல்ல என கூறியுள்ளார்.