ரயிலில் அடிக்கடி பயணிப்பவரா? டிக்கெட் ரூல்ஸ் மாற்றம் - முழு விவரம் இதோ..
ரயில் டிக்கெட் ரூல்ஸ் மாற்றம் குறித்து பார்ப்போம்.
பொது டிக்கெட்
ரயில் பொது டிக்கெட் (general ticket) வைத்திருப்பவர்களுக்கான விதிகளில் சில திருத்தம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக பயணிகள் பொது டிக்கெட்டுடன் எந்த ரயிலிலும் ஏறலாம். ஆனால், இந்த மாற்றத்தின்படி ரயிலின் பெயர் டிக்கெட்டில் குறிப்பிடப்படலாம். இதன்மூலம் பயணிகள் அவரவர் ரயிலுக்கு மட்டும் செல்லும் வகையில் திருத்தம் செய்யப்படலாம்.
ரூல்ஸ் மாற்றம்
பொது டிக்கெட் வாங்கிய நேரத்தில் இருந்து சரியாக 3 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு பயணி தனக்கு ஒதுக்கப்பட்ட ரயிலைத் தவறவிட்டால், அவர்கள் புதிய டிக்கெட்டை வாங்க வேண்டியிருக்கும். ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டால், அது விபத்துகள் ஏற்பட வழிவகுக்கும்.
பொது டிக்கெட்டுகளில் ரயில் பெயர்களை குறிப்பிடுவதன் மூலம் பயணிகளின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகாரிகளுக்கு உதவும். இதுதவிர எந்த ரயிலில் ஏறலாம் என்பது பற்றி பயணிகளிடையே தெளிவு கிடைக்கும் என்பதால் இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.