ரயில் கட்டணத்தை உயர்த்தப்போகும் ரயில்வே? பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்!
ஜூலை 1 முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த உள்ளது.
ரயில் டிக்கெட்
இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசாவும்,

சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்தப்படவுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
கட்டண உயர்வு
இருப்பினும், புறநகர் ரயில்கள் மற்றும் 500 கிலோமீட்டருக்கு குறைவான தொலைவு பயணங்களுக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்காமல்,

ஏஜெண்ட்கள் உள்ளே நுழைந்து டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கும் நிலை இருந்தது. தொடர்ந்து இதனை தடுக்க அரசு, ஐஆர்சிடிசியில் போலியான கணக்குகளை கண்டறிந்து, அதனை முடக்கியது.
மேலும், ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் இந்தக் கட்டண உயர்வு குறித்து ரயில்வே அமைச்சகம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.