கோலி, ரோகித் சர்மாவை எல்லாம் எங்ககிட்ட அனுப்புங்க - பிசிசிஐக்கு டிவில்லியர்ஸ் கோரிக்கை
வெளிநாட்டு வீரர்களை அதிக அளவு தேர்வு செய்ய டிவில்லியர்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா 20
ஐபிஎல் தொடர் பாணியில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா 20 தொடர் தொடங்கவுள்ளது. இதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் பங்கேற்கிறார்.
பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதன்மூலம் எஸ் ஏ 20 தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ்,
டிவில்லியர்ஸ் கோரிக்கை
இந்தத் தொடரில் மேலும் பல இந்தியர்கள் விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன். எதிர்காலத்தில் பல முக்கிய இந்திய வீரர்களை எங்கள் தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்படி நடந்தால் மேலும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
உலகில் தலைசிறந்த வீரர்களும் இந்தியாவில் தலைசிறந்த வீரர்களும் இணையும் போது சிறந்த கிரிக்கெட் உருவாகிறது. எனவே கிரேம் ஸ்மித் மற்றும் அவர்களுடைய குழு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வெளிநாட்டு வீரர்களை அதிக அளவு தேர்வு செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறும் வீரர்கள் தான் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க பிசிசியை அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.