இந்தியா இப்படி தான் ஏமாற்றி ஜெயிக்கிறாங்க..ஐசிசி விசாரிக்கணும் - கொந்தளித்த பாகிஸ்தான்!

Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2024
By Swetha Jun 26, 2024 06:04 AM GMT
Report

இந்தியா ஏமாற்றி வெற்றி பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் குற்றம் சாட்டுயுள்ளனர்.

ஏமாற்றி ஜெயிக்கிறாங்க..

கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதி போட்டி வரை வந்து இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. இந்த சூழலில் இம்முறையாவது பாகிஸ்தான் அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் முதல் சுற்றிலேயே அணி வெளியேறியது அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்தியா இப்படி தான் ஏமாற்றி ஜெயிக்கிறாங்க..ஐசிசி விசாரிக்கணும் - கொந்தளித்த பாகிஸ்தான்! | Indian Players Tampering The Ball Says Pakistan

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அரை இறுதி வரை முன்னேறி இருப்பதை பாகிஸ்தான் அணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால்,அந்த அணியின் முன்னாள் கேப்டன்கள் இன்சமாம் உல் ஹக், சலீம் மாலிக் ஆகியோர் இந்திய அணி ஏமாற்றி தான் வெற்றி பெற்றிருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக இன்சாமம் உல் ஹக் பேசுகையில், முழு பாகிஸ்தான் எதிரான போட்டியில் இந்திய அணி 119 ரன்கள் தான் அடித்து இருந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. 88 ரன்கள் எடுக்கும் போதுதான் ஐந்து விக்கெட் இழந்தது. ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது.

கேவலமா இல்லையா? ரசிகர்களை ஏமாற்ற இப்படியா - மாஸ்டர் பிளான் போட்ட பாக். வீரர்கள்!

கேவலமா இல்லையா? ரசிகர்களை ஏமாற்ற இப்படியா - மாஸ்டர் பிளான் போட்ட பாக். வீரர்கள்!

கொந்தளித்த பாகிஸ்தான்

இதற்கு காரணம் இந்திய அணி பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்தது. இந்திய வீரர் ஆர்ஸ்தீப் பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் பணியை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இது குறித்து ஐசிசி விசாரிக்க வேண்டும். இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று குற்றச்சாட்டு இருக்கிறார்.

இந்தியா இப்படி தான் ஏமாற்றி ஜெயிக்கிறாங்க..ஐசிசி விசாரிக்கணும் - கொந்தளித்த பாகிஸ்தான்! | Indian Players Tampering The Ball Says Pakistan

ஆர்ஸ்தீப் சிங் 15 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் ஒன்பது ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது.

முன்பு போல் பந்தை சேதப்படுத்தினால் அதனை ஈசியாக கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் தற்போது இருக்கின்றது. மைதானத்தை சுற்றி 360 டிகிரி கேமரா கோணங்கள் இருக்கும் நிலையில் பந்தை சேதப்படுத்துவது என்பது முடியாத காரியம்.

இதனால் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வயிற்று எரிச்சலில் பேசுகிறார். என ரசிகர்கள் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.