Wednesday, May 14, 2025

கேவலமா இல்லையா? ரசிகர்களை ஏமாற்ற இப்படியா - மாஸ்டர் பிளான் போட்ட பாக். வீரர்கள்!

Pakistan national cricket team T20 World Cup 2024
By Karthick a year ago
Report

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ரௌஃப் ரசிகர் ஒருவருடன் சண்டையிட்டதாக வீடியோ போலி என சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

வெளியேறிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை டி20 தொடரின் முதல் சுற்றில் இருந்தே வெளியேறியுள்ளது. அமெரிக்கா, இந்தியா அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில், ஆறுதலாக இரு வெற்றிகள் அயர்லாந்து மற்றும் கனடா அணிகளுக்கு எதிராக பெற்று நாடு திரும்பியுள்ளது பாகிஸ்தான்.

Pakistan cricket team 2024 world cup

பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து அந்நாட்டு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். அதே சில சமயங்களில், வீரர்களை நேரில் பார்க்கும் போதும் கோவம் வெளிவந்து விடுகிறது. அப்படி தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

haris rauf fight in streets of florida

அமெரிக்காவின் புளோரிடாவில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப் தனது மனைவியுடன் நகரத்தை சுற்றிக் கொண்டிருந்த போது, ஒருவரிடம் தன்னுடைய நிதானத்தை இழந்து சண்டையிட்ட வீடியோ நேற்று சமூகவலைத்தளத்தில் வைரலானது.

 

ஏமாற்று வேலை

பலரும் இது தொடர்பாக பல வித கருத்துக்களை தெரிவித்தார்கள். இந்த விவகாரத்தில் தற்போது அதிர்ச்சிதறக்கூடிய விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது அதாவது தோல்வியை மறைத்து அதனை அனுதாபமாக மாற்றவே இப்படி ஒரு காரியத்தில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

haris rauf fight in streets of florida

இது அனைத்தும் PR வேலையாம். இவ்வாறு செய்தால், ரசிகர்களின் கோபம் மாறி, அது அனுதாபமாக மாறும் என்ற காரணத்தால், இவ்வாறு செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.