நீ யாருய்யா அத சொல்ல..நடுரோட்டில் ரசிகருடன் மல்லுக்கட்டிய பாகிஸ்தான் பௌலர்!!
புளோரிடாவில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரௌஃப் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
பாகிஸ்தான் தோல்வி
எதிர்பாராத விதமாக கணிக்க முடியாத அணியாக இருந்த பாகிஸ்தான், உலகக்கோப்பை டி20 தொடரின் முதல் சுற்றில் இருந்தே வெளியேறியுள்ளது. அமெரிக்கா, இந்தியா அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில், ஆறுதலாக இரு வெற்றிகள் அயர்லாந்து மற்றும் கனடா அணிகளுக்கு எதிராக பெற்று நாடு திரும்பியுள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து அந்நாட்டு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். அதே சில சமயங்களில், வீரர்களை நேரில் பார்க்கும் போதும் கோவம் வெளிவந்து விடுகிறது. அப்படி தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மல்லுக்கு..
அமெரிக்காவின் புளோரிடாவில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப் தனது மனைவியுடன் நகரத்தை சுற்றிக் கொண்டிருந்த போது, ஒருவரிடம் தன்னுடைய நிதானத்தை இழந்துள்ளார். அவர் விரும்பாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அந்நபர் எதாவது கூறியிருக்க வேண்டும்.
அதனால் சட்டென கோபமடைந்த ஹரிஸ் அந்த நபரை தாக்குவதற்காக அவரை நோக்கி ஓடினார். அப்போது சிலர் அவரைத் தடித்து பிடித்தனர். ரவூப்பின் மனைவி கூட அவரைத் தடுக்க முயன்றார். இருப்பினும் ஹரிஸ் அந்நபருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் மாறி மாறி வார்த்தை மோதலில் ஈடுபட்டார்கள்.
Kalesh b/w a Fan and Pakistani Bowler Haris Rauf (Haris Rauf Fight His wife tried to stop her, Haris: Ye indian hi hoga
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 18, 2024
Guy- Pakistani hu)
pic.twitter.com/e4DpwX0b4S
ஆனால் அவர்களைச் சுற்றியிருந்தவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்காமல் பிரித்து சிறப்பான வேலையைச் செய்தனர்.
வைரலான அந்த வீடியோவில், ரவுஃப் அந்த நபரை "அவர் இந்தியன்" என்றும் குறிப்பிட அந்நபர் நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்கிறார். ரவூப்பின் மனைவி தொடர்ந்து அவரை அமைதிப்படுத்த முயன்றார், ஆனால் கிரிக்கெட் வீரர் அந்த நபரை எதிர்கொள்வதும், அவருடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்வதும் வருத்தமாக இருந்தது.