டீமா இது - பல டீம் பாத்துட்டேன்..இவுங்க'ல மாறி பாத்ததே இல்லை!! கழுவு ஊற்றிய பயிற்சியாளர்
பாகிஸ்தான் அணியின் தோல்வியை அடுத்து அணியின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
தோல்வி
உலகக்கோப்பை டி20 தொடருக்காக முன்பாக பாகிஸ்தான் அணி மிலிட்டரி பயிற்சி எல்லாம் எடுத்து கொண்டது. ரசிகர்களும் அடேயப்பா எல்லா டீம்'யும் போட்டு பொளக்க போறாங்க என நினைத்து கொண்டிருந்த போது, நடந்தது சற்று வேறு.
பெரிய கிரிக்கெட் அறிமுகமில்லாத அமெரிக்கா அணி தான் பாகிஸ்தானை முதல் போட்டியில் பொளந்தது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் வழக்கம் போல இந்தியாவிடம் போறபோக்குல இன்னொரு சூடு போட்டுக்கிட்டது பாகிஸ்தான் அணி.
அடுத்து அயர்லாந்து அணிக்கு எதிராக just எஸ்கேப் வெற்றி. ஆனால், குறுக்குக்கே இந்த கோவுசிக் வந்த என்பதை போல, பாகிஸ்தான் கனவை ஊதி தள்ளியது மழை. தொடரை விட்டு வெளியேறும் போது, கனடாவை வீழ்த்தி மூட்டை முடிச்சை கட்டியது.
பாகிஸ்தான் அணியின் கோச் யாருக்கு'னு கேட்ட பலருக்கும் வேர்க்கும். இந்திய அணிக்கு 2011-இல் உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேரி கிறிஸ்டன். இந்த furniture'ஐயும் முச்சந்தி'ல போட்டு உடைத்த மாதிரி, அவரை விட்டுவைக்கவில்லை பாகிஸ்தான் அணி.
கேரி கிறிஸ்டன் ஆதங்கம்
தொடரை விட்டு பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கோச் கேரி கிறிஸ்டன். சற்று கோபமாகவே பேசியுள்ள அவர், அணியில் ஒற்றுமை துளியளவு கூட இல்லை.
ஒரு அணி எனக்கூறுகிறார்கள், ஆனால் நிச்சயமாக ஒரு அணியாக தெரியவில்லை.
மற்றொருவருக்கு ஆதரவாக இல்லாமல், விலகுகிறார்கள். ஒவ்வொருவரும் தனிச்சையாக இருக்கிறார்கள். ஆளுக்கொரு திசை செல்கிறார்கள். ஏராளமான அணிகளுடன் பணியாற்றியுள்ளேன், ஆனால் இதுபோன்ற ஒரு சூழலை பார்த்ததில்லை