என்னதான் செய்வார் கம்பீர் - பிரச்சனை தீரவேயில்லை!! தொடர்ந்து தடுமாறும் இந்திய வீரர்கள்?
தற்போதைய இந்திய அணியின் இளம் வீரர்கள் பலர் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுகிறார்கள்.
தடுமாறும் வீரர்கள்
அது நேற்றைய ஆட்டத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது. கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் ஓப்பனர்களாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய தீக்ஷனாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள சற்று தடுமாறியது வெளிப்பட்டது.
குறிப்பாக ஜெய்ஸ்வால் தீக்ஷனாவிடம் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங், இறுதியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தீக்ஷனாவின் பந்துவீச்சிலேயே அவுட்டாகினார்கள்.
தீராத நிலை
ஒரு கட்டத்தில் இந்திய அணி வீரர்கள் சுழற்பந்துகளை எளிதில் கையாளுபவர்களாக இருந்தார்கள். தற்போதைய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் சிறப்பாக சுழற்பந்துவீச்சாளர்களை கையாளுவார்.
ஆனால், தற்போதைய சூழலில் இந்திய இளம் வீரர்கள் சிலர் தடுமாறுகிறார்கள். கம்பீர் தலைமை ஏற்றதும் இவை சரியாகும் என கணிக்கப்பட்ட நிலையில், இன்னும் இந்த பிரச்சனை நீடித்து கொண்டே தான் இருக்கிறது.
சுழற்பந்துவீச்சில் இந்திய திணறுவதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடும் போது, நாதன் லயன் இந்திய அணியை நெருக்கடிக்குள்ளாக்குவது.