தோனி கெட்ட வார்த்தையில் திட்டிருக்காரு; காரணம் இதுதான் - மோகித் சர்மா
தோனியிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கியுள்ளதாக மோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
மோஹித் சர்மா
தோனி என்றாலே பெரும்பாலும் அழுத்தமான சூழ்நிலைகளிலும் பதற்றமடையாமல் அமைதியாக தைரியமான முடிவுகளை எடுப்பதில் சிறந்தவராக அறியப்படுகிறார்.
அதனால் அவரை கேப்டன் கூல் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். ஆனால் அதேநேரம் கடுமையாக கோபப்படக்கூடியவராக இருந்திருக்கிறார். இந்நிலையில், இதுகுறித்து தகவல் பகிர்ந்துள்ள மோஹித் சர்மா,
“தோனியிடம் நான் நிறைய திட்டுக்களை வாங்கியுள்ளேன். இருப்பினும் களத்தில் நடப்பதெல்லாம் அங்கேயே இருக்கும் என்று தோனி சொல்வார். பின்னர் அதைப்பற்றி உங்களுக்கு அவர் புரியவும் வைப்பார். தீபக் சஹரும் நிறைய திட்டுகளை வாங்கியுள்ளார்.
தோனியின் கோபம்
நக்குல் பாலை வீசிய சஹர் புல் டாஸ் போட்டு பவுண்டரி அல்லது சிக்ஸர் கொடுத்தார் என்று நினைக்கிறேன். அதனால் மஹி பாய் மீண்டும் அதை வீசாதீர்கள் என்று அவரிடம் சொன்னார். அதற்கு ஓகே மஹி பாய் என்று சொன்ன சஹர் மீண்டும் சில பந்துகளுக்கு பின் நக்குல் பந்தை வீசினார்.
அது பேட்ஸ்மேன் தலைக்கு மேலே சென்றது. அப்போது சஹாரிடம் சென்ற தோனி அவருடைய தோள் மீது கை போட்டு சில விஷயங்களை சொன்னார். போட்டி முடிந்த பின் தோனி என்ன சொன்னார்? என்று அவரிடம் கேட்டோம். அதற்கு நீங்கள் முட்டாள் இல்லை.
நான் தான் முட்டாள் என்று சில கெட்ட வார்த்தைகளுடன் தோனி சொன்னதாக சஹார் கூறினார். அதே சமயம் தோனி பாய் சஹரை சமமாக விரும்புவார்” எனத் தெரிவித்துள்ளார்.