அந்த இந்திய வீரரை ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்துடுங்க - கேப்டன் வேண்டுகோள்!
விராட் கோலி குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அளித்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
கேப்டன் ஹஸ்மதுல்லா
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா. பயிற்சியாளர் ஜனார்த்தன் டிரட். அண்மையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியுள்ளது.
இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக இன்னும் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கூட வெல்லவில்லை. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஹஸ்மத்துல்லா, இந்திய அணி வீரர் யாராவது ஒருவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு வேண்டுமென்றால் யாரை கேட்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
விராட் கோலி
இதற்கு பதிலளித்துள்ள அவர், ஒருவர் அல்ல பலர் இருக்கிறார்கள். ஆனால் ஒருவர் வேண்டுமென்றால் நான் விராட் கோலியை தான் தேர்வு செய்வேன். கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார் என்ற புள்ளிவிவரத்தை பாருங்கள். அவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் கடந்து இருக்கிறார்.
அது யாராலையும் தொட முடியாத மிகப்பெரிய சாதனையாகும். சதம் அடிப்பது குறித்து யார் வேண்டுமானாலும் வாயால் சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் மைதானத்திற்கு சென்று சதம் சதமாக அடிப்பது என்பது உண்மையிலே முடியாத காரியம்.
அதுவும் 50 முறை இதனை விராட் கோலி நிகழ்த்தி இருக்கிறார் என்றால் அது மிகப் பெரிய சாதனை. விராட் கோலிக்காக அவருடைய புள்ளி விவரங்களே பேசும் எனத் தெரிவித்துள்ளார்.