குலாப் ஜாமுனுக்கு தடை... தாய்லாந்தில் இந்தியர் செய்த தரமான சம்பவம்!

Viral Video India Thailand
By Sumathi Oct 04, 2022 07:52 AM GMT
Report

விமான நிலையத்தில் குலாப் ஜாமுனுக்கு அனுமதி வழங்காத நிலையில் இந்திய பயணி செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

 இந்திய பயணி

இந்தியாவைச் சேர்ந்தவர் ஹிமான்ஷு தேவ்கன்.தாய்லாந்து நாட்டின் பூகெட் விமான நிலையத்திற்கு பயணத்திற்காக சென்றுள்ளார். அப்போது அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு டப்பா இருந்தது.

குலாப் ஜாமுனுக்கு தடை... தாய்லாந்தில் இந்தியர் செய்த தரமான சம்பவம்! | Indian Passenger Did Stopped Carrying Gulab Jamun

அதை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் குலாப் ஜாமுன் இருந்தது. இதனை எடுத்து செல்லக்கூடாது என அதிகாரிகள் கூறி தடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, குலாப் ஜாமுனை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியுள்ளார்.

குலாப் ஜாமுனுக்கு தடை

இதையடுத்து அவர் விமான நிலையத்தில் அனைத்து அதிகாரிகளுக்கும் குலாப் ஜாமுனை வழங்கினார். அதிகாரிகளும் ஆவலுடன் சுவைத்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை ஹிமான்ஷு தேவ்கன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

குலாப் ஜாமுனுக்கு தடை... தாய்லாந்தில் இந்தியர் செய்த தரமான சம்பவம்! | Indian Passenger Did Stopped Carrying Gulab Jamun

அதன்பிறகு இந்த வீடியாவை ஹிமான்ஷு தேவ்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதில், ‛‛இன்றைய நாளின் ஆரம்பம்'' என்றும் பாதுகாப்பு தொடர்பான சோதனையின்போது அதிகாரிகள் குலாப் ஜாமுனை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் நாங்கள் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தோம்'' என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து பாரட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.