ஆவின் பொருட்கள் விலை திடீர் உயர்வு..!
ஆவின் பொருட்கள் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆவின் பொருட்கள்
தமிழ்நாடு ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆவின் நிறுவனம் மூலம் பாலை தவிர மோர், தயிர், வெண்ணெய், நெய், லஸ்ஸி, பனீர், யோகர்ட், பாதாம் பவுடர், உலர் பழ கலவை, ஐஸ் கிரீம்கள், சாக்லெட்கள், குலாப் ஜாமுன்,பால்கோவா,
பால் பேடா, மைசூர்பாகு, ரசகுல்லா, டீ-காபி, பேவர்டு மில்க் போன்ற பலவகையான பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பொருட்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
திடீர் விலை உயர்வு
இந்நிலையில்,மத்திய அரசு தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியை விதித்து உத்தரவிட்டது.
5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர் மற்றும் நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. 1 லிட்டர் நெய்க்கு ரூ.50, 1 லிட்டர் தயிருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
தயிர் 100கிராம் 10ரூபாயிலிருந்து 12ரூபாய் ஆகவும், 1 கிலோ ரூ.100ல் இருந்து ரூ.120 ஆகவும், 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.535ல் இருந்து ரூ.580 ஆகவும், 500 மிலி ஆவின் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும் உயர்கிறது. ஒரு லிட்டர் நெய்-க்கு ரூ.50, ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 அதிகரித்துள்ளது.
ஆவின் பிரிமியம் கப் தயிர் ரூ.40ல் இருந்து 50 ஆகவும், பிரிமியம் தயிர் ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது.
200மிலி பாக்கெட் லஸ்சி ரூ.20, புரோபயோடிக் லஸ்சி ரூ.27லிருந்து ரூ.30 ஆகவும், 200 மில்லி மோர் ரூ.15லிருந்து ரூ.18 ஆகவும், 200 மிலி மோர் பாட்டில் ரூ.10லிருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் 50 கிராம் தயிர் விலையில் மாற்றமில்லாமல் ரூ.5-க்கு விற்கப்படுகிறது.