செய்யாத தவறு; கர்ப்பிணிக்கு சிறை தண்டனை - மன்னிப்பை நிராகரித்த இந்திய பெண்
செய்யாத தவறுக்காக பெண் ஒருவர் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
தவறான புகார்
பிரிட்டன், தபால் நிலையங்கள் புஜிட்சு நிறுவனம் தயாரித்த மென்பொருளில் செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து வரவு - செலவு கணக்கு, பொருட்கள் இருப்பு விபரம் உள்ளிட்டவை இந்த தொழில்நுட்ப முறையில் தான் கையாளப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் பைப்லிட் கிராம தபால் நிலையத்தில் மேலாளராக வேலை செய்த இந்திய வம்சாவளியான சீமா மிஸ்ரா என்பவர், அங்கிருந்த 70 ஆயிரம் பவுண்டுகள்(74 லட்சம் ரூபாய்) திருடியதாக புகாரளிக்கப்பட்டது.
மேலும், புஜிட்சு நிறுவன பொறியாளர் கரேத் ஜென்கின்ஸ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமாவுக்கு நான்கரை மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
நிராகரித்த பெண்
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், புஜிட்சு நிறுவன சாப்ட்வேரில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகவே தபால் நிலையங்களில் இருந்த நிதியில் முரண்பாடு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீமா சிறை சென்ற போது கர்ப்பிணியாக இருந்தது எனக்கு தெரியாது. பல ஆண்டுகளுக்கு பிறகுதான் அது எனக்கு தெரிய வந்தது.
சீமா மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் இதற்காக மன்னிப்பு கோருகிறேன் என கரேத் ஜென்கின்ஸ் கூறியுள்ளார். இதனை நிராகரித்துள்ள சீமா, இந்த மன்னிப்பை எவ்வாறு நான் ஏற்க முடியும்? என் 10 வயது மகன் பிறந்த நாளில், அவன் அம்மாவை சிறைக்கு அனுப்பியதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நான் சிறையில் இருக்கும் போது என் வயிற்றில் இருந்து கஷ்டப்பட்ட இளைய மகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் அவரின் மன்னிப்புகளை ஏற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.