ஒர்க் ஃபிரம் ஹோம்.. சரியாக வேலை செய்யாத ஊழியர் - தொழில்நுட்பம் மூலம் நோட்டமிட்டு தூக்கிய நிறுவனம்!

Australia World
By Vinothini Aug 11, 2023 06:52 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

பெண் ஊழியர் சரியாக வேலை செய்யாததால் நோட்டமிட்ட நிறுவனம் அவரை தூக்கியுள்ளனர்.

வேலை செய்யாத பெண்

ஆஸ்திரேலியா இன்ஷூரன்ஸ் குழுமத்தின் ஆலோசகராக பணிபுரிபவர் சுசி சீகோ, இவர் அந்நிறுவனத்தில் காப்பீட்டு ஆவணங்களை உருவாக்குவதற்கும், ஒழுங்குமுறை காலக்கெடுவை சந்திப்பது போன்ற குறிப்பிட்ட பொறுப்புகளில் வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் (work from home) முறையில் வேலை பாத்து வந்தார்.

women-fired-after-their-company-noted-her-work

முதலில் நன்றாக வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஆண்டு அவரது காலக்கெடுவை முடிக்கவில்லை, இதனால் ஆஸ்திரேலிய இன்ஷூரன்ஸ் குழுமம், கடந்த அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே சீகோவின் செயல்பாட்டை சைபர் தொழில்நுட்பமான கீஸ்ட்ரோக் மூலம் கண்காணித்தது.

தூக்கிய நிறுவனம்

இந்நிலையில், சீகோ 47 நாள்கள் தாமதமாக வேலையைத் தொடங்கியுள்ளார், 29 நாள்கள் தன் வேலையைச் சீக்கிரமே முடித்துள்ளார், மேலும் 44 நாள்களுக்கு அவர் வேலையே செய்யவில்லை என்று அறிந்த நிறுவனம் அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளார்.

women-fired-after-their-company-noted-her-work

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அந்த நிறுவனம் பணிநீக்க விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் ஃபேர் வொர்க் கமிஷனில் (FWC) புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை விசாரித்த FWC அந்த பெண் மீது தான் தவறு என்று அவர் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்யவில்லை, அதனால் வேலையில் இருந்து நீக்கியது சரியானது என்று கூறியுள்ளது. இதனால் தான் 18 ஆண்டுகள் செய்து வந்த வேலையை இழந்துள்ளார் அந்த பெண்.